பூட்டிய வீடு

பூட்டிய வீடு

கூரை வீடுகள் இருந்த
காலத்திலேயே கட்டிய கல் வீடு
என்பதனால் ,
"மச்சு வீடு" என்று அழைப்பாள்
என் பாட்டி...


ஊரில் உள்ளவர்களுக்கு
பஞ்சாயத்து தலைவர் என்பதால்
"தலைவர் வீடு "


எங்கள் அப்பாவின் நெருங்கிய நண்பர்
என்பதால் “தண்டபாணி வீடு”
என்று பெயர் சொல்லியே
அழைப்பார்...

எனக்கு என் தங்கைக்கும்
அது "மாமா வீடு "

எத்தனையோ பேர்
எத்தனை பெயர் வைத்து அழைத்தாலும்


தண்டபாணி மாமாவும் அவர் தம்பியும்
சொத்துக்காக சண்டை போட்டு
நீதிமன்றம் போக ஆரம்பித்ததிலிருந்து

அதை
"பூட்டிய வீடு" என்றே எல்லோரும் அழைக்கிறார்கள்

.................. ராஜகுமார்

எழுதியவர் : (8-Feb-11, 7:43 pm)
சேர்த்தது : rambo
பார்வை : 460

மேலே