மதமும் மொழியும்

மதமும் மொழியும்

-எஸ். ஹமீத்-


மதம்
நமது வழி...
மொழி
நமது விழி...!

மதம்
நமது அடையாளம்...
மொழி
நமது அஸ்திரம்...!

மதம்
நமது தர்மம்...
மொழி
நமது கர்வம்...!

மதம்
நமது தனித்துவம்...
மொழி
நமது தத்துவம்...!

மதம்
நமது நம்பிக்கை...
மொழி
நமது நட்புக் கை...!

மதம்
நமது ஆன்மா...
மொழி
நமது அம்மா...!

மதம்
நன்னெறி...
மொழி
நா நெறி...!

மதம்
ஆன்மீக விசை......
மொழி
லௌகீக இசை...!

மதம்
சொர்க்கத்தின் வண்ணம்...
மொழி
சத்தத்தின் வடிவம்...!

மதம்
இறைவனை நோக்கியது..
மொழி
இதயத்தை நோக்கியது...!

பல மொழிகள் பேசும்
ஒரு மதமுமுண்டு...
ஒரே மொழி பேசும்
பல மதங்களுமுண்டு...!

மதங்களால்
வணங்கி வாழ்வோம்...
மொழியினால்
இணங்கி வளர்வோம்

எழுதியவர் : எஸ்.ஹமீத் (30-Jan-14, 4:42 pm)
சேர்த்தது : எஸ். ஹமீத் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : mathamum mozhiyum
பார்வை : 233

மேலே