ஆதாமும் ஆப்பிளும் --- மணியன்

மறக்க நினைக்கிறேன். . .
மனதினுள் நீயோ
மண்டியிட்டு அமர்ந்திருக்கிறாய். . .
ஏமாந்த நினைவுகளில்
ஏன் இந்த
ஏற்ற தாழ்வு நாடகங்கள். . . .
உறக்கம் தொலைத்த
உடலுக்கு தெரியுமோ
உணர்வுகள் விதைத்த விதைகள். . .
காலத்தின் கட்டாயம்
காதல்தான் என்றால்
காமனும் காலனும் கூட்டு களவானியா. . .
தேடியும் கிடைக்காத
தேவ பானமா நீ
தேங்கி விட்டாய் என் ஆழ் மனதில். . .
காதலரெல்லாம் தான் காக்க
காவாக்கால் நோயுறுவர் தன்
கண்ணடி பட்டே. . .
ஆதாம் அன்றைக்கு
அந்த ஆப்பிளின்
அருகினில் ஏன்தான் போனானோ. . .
ஆண்கள் நாங்கள்
அடி பிசகி
ஆரணங்கின் அடிமனதில்
அபயம் தேடி குடியேற
அன்றுமுதல் வழி வகுத்தான். . . . .