அன்னை பவானி

சங்கமெச்வரம் என சொல்ல படும் ஈரோட்டில் பவானியில் உள்ள கோயில் பராசரர் தவம் செய்து ஜீவ சமாதி அடைந்த இடம் எனவே பராசர க்ஷேத்ரம் என பெயர் . பராசரர் வியாச மஹரிஷியின் தந்தை . பராசரர் வழிபட்ட காரணத்தால் சுவர்ண க்ஷேத்ரம் ஆகும் அது என்ன சுவர்ண க்ஷேத்ரம் . யாரேனும் ஒரு சிறிய தங்க மோதிரம் அல்லது எதாவது தங்கத்தை வாங்கி அதனை முதலில் பவானி கோயிலில் சிவனை நினைத்து அணிந்தால் தங்கம் எல்லா நாட்களும் சேரும் என நம்பிக்கை . எல்லோராலும் இதற்க்காக பவானி வர இயலாது . எனினும் கவலை வேண்டாம் . அன்னை பவானியை நினைத்து அம்மா பவானி அருள்வாய் என உலகில் எங்கு இருந்தாலும் அவளை நினைத்து புதிதாக நகை வாங்கும் பொழுது நினைத்து அணிந்தால் பராசர மகரிஷிக்கு சுவர்ணத்தின் சித்தியை தந்த அன்னை நம் இல்லத்தையும் தங்கத்தால் நிரப்புவாள் . எந்த நாள் நகை வாங்கினாலும் அன்னை பவானி நாமத்தை சொல்லி வாங்கினால் அந்த நகைகள் அடகு கடை செல்லும் நிலை குறையும் செல்வம் பெருகும் ஆயிரம் அட்சையை திருதியில் வாங்கும் நன்மையை எந்த நாளில் நகை வாங்கினாலும் அதை முதலில் அணியும் சமயத்தில் அன்னை பவானி நாமம் சொன்னால் கிட்டும் என கருத்து உண்டு அன்னை பவானி போற்றி போற்றி

எழுதியவர் : முரளிதரன் (31-Jan-14, 11:26 am)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : annai pavaani
பார்வை : 133

சிறந்த கட்டுரைகள்

மேலே