பழுத்த இலை

ஓங்கி வளர்ந்த ஆலமரம் - விழுதுகள்
பலவற்றை இம் மண்ணில் விதைத்த மரம்
கிளையான உறவுகளை வளர்த்த மரம்
பருவங்கள் பலவற்றை கடந்த மரம்
இந்த முதுமையிலும் இளமையின் சிரிப்பு கண்களிலோ காந்தத்தின் இழுப்பு ....!
இவர் அனுபவத்தின் கண்ணாடி
இவருக்கு முன் நாம் வெறும் ஜாடி ...!
பழுத்த இலையாய் பக்குவமாய் இருக்கும்
இவரைப் பார்த்தாலே மனமும்
வயிரும் நிரம்பி வழியும் -தன்னம்பிக்கை எனும்
தொகை மயிலும் எழுந்து ஆடும்!- சோம்பலும்
சொல்லிக் கொள்ளாமல் ஓடிப் போகும் ...!
இளைஞர்களே ...!இளைஞர்களே ...! இந்த
அனுபவக் கண்ணாடியை உங்கள் இளமை முறுக்கால் போட்டு உடைத்து விடாதீர்கள்
இந்த பழுத்த இல்லையை பரிகாசம் செய்யாமல்
பக்குவமாய் பாத்துக் கொள்ளுங்கள் ....!
இவர்கள் காலம் தந்த வான தூதர்கள்- நம் கண் முன்னே பவனி வரும் கடவுளின் அவதாரங்கள்
முதுமையான இவர்களுக்கு
முற்றுப் புள்ளி வைக்காமல்
வெறும் கமாப் போட்டு
கண்டுக் காமல் இருக்காமல்
ஆச்சர்யக் குறியாய் அப்படியே விடாமல்
இவர்களின் வாழ்கையை
கேள்விக் குறியாக்காமல்
அடைப்புக் குறிப் போட்டு
நம்மோடு அனைத்துக் கொள்வோம் ...!
முதுமைக்கு முக்கியம் தருவோம் ....!