எனக்காக கரைந்தவன்

என் எண்ணத்தை வண்ணமாக்க
கரைந்தவன் நீ ..!
என் வாழ்க்கையை முழுமையாக்க
கரைந்தவன் நீ ..!
பேச இயலா தருணங்களில்
உன்னை கரைத்து என் உள்ளம்
உரைத்தவன் நீ !
கண்ணீரோ புன்னகையோ
இரண்டிலும் என்னோடு இருந்தவன் நீ !
நீ இன்றி நான் முழுமை இல்லை ..!!
"என் அன்பு எழுதுகோலே !!"