அடுத்த தலைமுறையை சிந்திப்பீர்

வன்முறைதான் வாழ்ந்திட வழியா
நன்முறைகள் மறந்தே போனதா !
கலவரமே நாளும் இங்கு நிலவரமா
காரணமே இல்லாமல் நிகழ்கிறதே !
களமாகிப் போனதே சாலைகளும்
கலங்கி தவிக்கிறதே நெஞ்சங்களும் !
காந்தி கண்ட கனவும் வீண்தானா
கைத்தடிகளே ஆயுதமாய் மாறியதே !
சாதிமத வெறிகள் மறைந்திடுமா
சச்சரவுகள் இனியும் நீங்கிடுமா !
அரசியல் அராஜகம் அடங்கிடுமா
அடக்கு முறைகளும் ஒழிந்திடுமா !
நம்சொத்தை நாமே அழிக்கலாமா
நாட்டில் அமைதியும் நிலவிடுமா !
அடுத்த தலைமுறையை சிந்திப்பீர்
அகிலத்தில் வாழ்ந்திட வழிவகுப்பீர் !
பழனி குமார்