சினந்தாய்

சின்னப் பிள்ளைபோல
சினம் கொள்ளும் அன்னை நீ!
சினந்தால் சிவக்கும் கண்களும்
மூக்கும்; கன்னங்களும்
சிவக்குகும் பழுத்த மாம்பழங்களாய்!
கடித்துச் சுவைக்கவா முடியும்?

திட்டுவாய் அடிப்பாய் என்று
தூர ஓடத்தானே முடியும்.
திரும்பி வ்ந்தாலும்
இரண்டில் ஒன்று நிச்சயம்
அல்லது இரண்டுமே கிடைக்கும்.

உன் பாசத்தில் குறையில்லை
உன் நாக்கும் கையுந்தான்
திருந்தவே மறுக்கிறது.

சிந்தனையில் இருப்பது தானே
செயல்வடிவம் கொள்ளும்
உன்னைக் குறை சொல்ல மாட்டேன்
உன் அன்னையைத் தான் சாடுவேன்


தாய் எட்டடி என்றால்
குட்டி பதினாறடி
(பழமொழி பொய்யாக வில்லை)
நான் முப்பத்திரண்டாகப்
போகக் கூடாதென்றெ
இறைவனிடம் வேண்டுவேன்.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (1-Feb-14, 2:30 pm)
பார்வை : 297

மேலே