சாவி தொலைத்த கடவுள்

மரணத்தை
தாண்டி பயணிக்க
தேவையான அனுபவத்தையே
இந்த வாழ்க்கை தருகிறது.......

மரணங்களில் இருந்தே
வாழ்க்கை பிறக்கிறது.....

மிதக்கும் வழியெங்கும்
திராட்சை தோட்டங்கள்.....
தீராத புன்னகையில்
பிடித்த ஒற்றை மூக்குத்திகள்.....

இலையுதிர் காலங்களில்
நேரங்களில்லாத பயணங்கள்....
தேட தேட ஒன்றுமில்லை
கிடைத்துக் கொண்டே சிரியுங்கள்.......

விளங்க வேண்டிய
விளக்க வேண்டிய
எதுவுமேயில்லாத
பெருவெளியில்
ஏதாவதொரு பூவுக்கு
உங்கள் பெயர்
இருப்பதாக
கனவை விதைக்கும்
மரணங்கள்
பெரு வாழ்க்கையின்
திறவுகோல்...........

சாவி தொலைத்த
சிறுவனாய்
ஏதாவதொரு கடவுள்
உங்களை
மேய்த்துக் கொண்டிருப்பார்......

எழுதியவர் : கவிஜி (1-Feb-14, 2:34 pm)
பார்வை : 137

மேலே