விடியலைத் தேடும் மின்மினி

விடியலைத் தேடும் மின்மினி நாங்கள்
நாங்கள் கூறுவதை செவி சாய்த்து கேளுங்கள்....!
புதிய கட்டிடங்கள் கட்டும் பிஞ்சு கரங்கள்
புத்தகம் பல கற்பது எப்பொழுது...?
எச்சிக் குவளைகளைத் துடைக்கும் கைகள்
எவரஸ்ட்டை எட்டி பிடிப்பது எப்பொழுது...?
சிறு பிள்ளைகளை ஏவும் கைகள்
உடையுமே அப்பொழுது...
குழந்தை தொழிலாளர்கள் தடுக்க
கடுமையானச் சட்டம் வந்திடுமே அப்பொழுது...
தற்பொழுது பள்ளிசெல்லும் மாணவர்கள் நாங்கள்...!
எங்கள் புத்தக சுமை குறைவது எப்பொழுது...?
தொல்லை தரும்
தேர்விலிருந்து விடுபடுவது எப்பொழுது...?
உங்கள் அறிவு பசி
தீருமே அப்பொழுது...
பரீட்சையில் முதல் மதிப்பெண்
பெற்று மகிழ்வாயே அப்பொழுது...
விடியலைத் தேடும் மின்மினி நாங்கள்
நாங்கள் கூறுவதை செவி சாய்த்து கேளுங்கள்...!
-ஹரிகரன்

எழுதியவர் : ஹரிகரன் (1-Feb-14, 2:21 pm)
பார்வை : 1987
மேலே