நான் என்பதே
புவி வாழ்க
மனை வாழ்க
மொழி வாழ்க
நீ வாழ்க
நான் வாழ்க
என்று வாழ்த்து.
நான் என்றுமே முதல் அல்ல
வையகம் இல்லாமல்
வானில்லாமல்
நிலம் இல்லாமல்
காற்றில்லாமல்
நான் இல்லை .
நான் என்றுமே இறுதியில்
மொழி முதலில்
தொழில் முதலில்
வழி முறை முதலில்
உண்மை முதலில்
நான் கடைசியில்.
நான் என்பதே ஒரு அகங்காரம்
அது ஒரு அலங்காரம்
அதில் ஓர் அடம்
அதுனுள்ளே ஒரு மமதை
ஆழ்ந்து நோக்கின் ஒர் ஆணவம்
நான் என்பது துச்சம்