மருத்துவத்தின் மகிமை மறந்த மருத்துவர்கள்

மருத்துவத்தின் மகத்துவத்தை மறந்த இன்றைய ஒரு சில மருத்துவர்களே…..
மனிதன் மனம் திறந்து முறையிடுவது இருவரிடம் மட்டுமே…….
ஒன்று: உடற் பிணி போக்கும் மருத்துவனிடம்,
இரண்டு: மனப்பிணி போக்கும் இறைவனிடம்.
பொருளை அடகு வைக்கும் கடையில் கூட திரும்ப பெற ,உத்திரவாதமுண்டு, உயிரை அடகு வைக்கும் உங்களிடம் அது இல்லையே……
சேவைக்காக தொடங்கும் பணியை, பின்பு பணத்தேவைக்காக மாற்றுவது ஏன்?
கதரும் ஒலியும், கண்ணீர் துளியும், கல் நெஞ்சை கரைக்கவில்லையா?
விலை பேசி விற்க, மனித உடலும், உறுப்புகளும், உயிரில்லா பொருட்கள் அல்ல. அவை, மனித இனத்தின், ஜீவனுள்ள உடமைகள்……
நிலையில்லா செல்வத்திற்காக, முடிவில்லா ஜீவனை வதைக்காதீர்கள்…..
மனித இனம் காக்க, மனித நேயம் வளர்க்கும் மன உறுதி கொள்ளுங்கள்,
மனித இனம் நிலைக்கட்டும்………

எழுதியவர் : பஞ்சாபகேசன் (5-Feb-14, 10:54 pm)
சேர்த்தது : panchapakesan
பார்வை : 142

மேலே