இயற்கையின் சீற்றம்
எங்கிருந்தோ வந்த -பெரும்
கார்மேகக் கூட்டம்
மண்ணை இருட்டாக்குது
இடி இடிக்குது
மேகம் வெடிக்குது
பெரும் மழை
பேய் மழையாய் கொட்டுது
காட்டாற்றில் நீர்பெருகி
கீழே கிராமமெல்லாம்
ஆற்று வெள்ளத்தால்
மூழ்கி அழியுது
பருவ மழை தவருது
காலம் தவறி
வரும் மழையோ
காலனாய் மாறுது
சிறு புயலும்
சூறாவளியாய் மாறி
மனிதரை மாய்க்குது
பூமி வெடிக்குது
எறிமலை தீயை கக்குது
கல்பிழம்பையும் மண்ணையும்
மழைபோல் கொட்டுது
பூமி அதிருது
நிலமும் வெகுவாய் நடுங்குது
கடலும் கொந்தளித்து
"சுனாமி" ஆகுது
பெரும் சேதம் விளையுது
பெருங் காடுகள்
கோடை அணளால்
தானே பற்றி எறிகுது
மரங்களெல்லாம் சாம்பலாகுது
மனையும் மக்களும் மாளுது
இன்று இதுதான்
மனிதன் வெகுவாய்க்காணும்
சுற்றுப்புறமும் சூழலும்
பொறுமையின் வடிவாம்
பூமித்தாய்
இன்று பெரும் சீற்றம்தான்
கொண்டாளோ
கொற்றவையாய் மாறி
கோர தாண்டவம் ஆடுகிறாளோ
தாயின் சீற்றம் தனியணும்
இயற்கையுடன் நாமும்
ஒன்றி வாழனும்