ஒரு முறையேனும்
மூலை அறையில்
முடங்கி க்கிடக்கும்
மூதாட்டியின் கண்ணீர் கதறல் ...
நீ இருக்கும் வீட்டில் தான்
நானும் இருக்கிறேன் ...
ஞாபகம் இருக்கிறதா மகனே?
சிதிலமடைந்த என் செவிகளில்
சில சமயங்களில்
சின்னதாக கேட்கும்
உன் குரல்
பஞ்சடைத்த என் பார்வை
முற்றிலும் பழுதாகிப் போவதற்குள்
உன்னை ஒரு முறையேனும்
பார்க்க வேண்டும் ..மகனே
என் அறைக்கு ஒரு முறையேனும்
வந்து செல்வாயா ?
காதுகளை த் தீட்டி காத்திருக்கிறேன்
உன் காலடி ஓசைக்காக ...
ஒரு முறையேனும் வந்து செல்வாயா ?
by .A.P.SathyaSwaroop.

