சிதறிய சிந்தனை சிறு கதை

சிதறிய சிந்தனை ! (சிறு கதை )
######################

வைஷ்ணவி காலையில் இருந்து பரபரப்புடன் காணப்பட்டாள். வீட்டிற்கு உறவினர்கள் வந்து கொண்டே இருந்தனர். அவளது ஒரு வயது குழந்தைக்கு பிறந்த நாள் . உறவினர்களும் நண்பர்களும் வர அனைவரையும் அவளது கணவன் ராகுல் வரவேற்றபடி, நின்று கொண்டு இருந்தான்.

குழந்தை கூட்டத்தை பார்த்ததும் அழுதுகொண்டு வைஷ்ணவியை விட்டு நகரவில்லை.

வைஷ்ணவி குழந்தையை தூக்கிக்கொண்டு வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

" வைஷ்ணவி , இவன் ராகவன் என் பால்ய தோழன் திரைப்பட துறையில் பணியாற்றுகிறான். திருமணத்திற்கு வரவில்லை வேலை இருந்ததால். இவனை நன்றாக பார்த்துக்கொள் இவன் இல்லையேல் நான் கல்லூரி படிப்பை முடித்து இருக்க முடியாது." ஸ்பெசலாக அறிமுகம் செய்து வைத்தான்.

ராகுல் அவன் வந்ததில் இருந்து அவனுடன் பேசிக் கொண்டு வருவோரை வரவேற்றபடி இருந்தான்.

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது ராகவன் வைஷ்ணவியை அவ்வப்பொழுது பார்த்துக் கொண்டு இருந்தான் அதை வைஷ்ணவி பார்க்க தவறவில்லை.

இவள் அவர்களை பார்க்கும் போது ராகவன் திரும்பிக் கொண்டான்.

ராகுல் , ராகவனை விட்டு பிரியாமல் தொனதொன என்று பேசிக்கொண்டே இருந்தான். ராகவன் வைஷ்ணவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் .

அதை கவனித்த வைஷ்ணவி....

" சே , என்ன இப்படி ஒரு நண்பனா ராகுல்க்கு. தோழனின் மனைவி என்று கூட நினைக்காமல் பார்கிறானே. " என்று நினைத்தபடி விலகி இருந்த புடவையை சரி செய்து கொண்டால்.

குழந்தை அழுகையை நிறுத்தியபாடு இல்லை. வைஷ்ணவி குழந்தையை சமாதானம் செய்து கொண்டு வந்திருப்பவர்களுடன் சிரித்து பேசிக் கொண்டு இருந்தால் .

"பந்தியில் சாப்பிடும் போது கூட பார்கிறானே ! என்ன மனிதன் இவன் , ராகுலிடம் சொல்லி இவன் பிரன்ட்ஸ்சிப்பை விட சொல்ல வேண்டும்.

குழந்தையை மார்பில் அனைத்துக் கொண்டு பரிமாறினாள்.

அனைவரும் விடைபெற்றனர். ராகுல் அவன் தோழன் ராகவனை அழைத்து வந்து

" வைஷ்ணவி ராகவன் போகிறானாம். இருக்க சொன்னால் கேட்க மாட்டேங்குறான் . நீயாவது சொல் " என்றான்.

"இரண்டு நாளில் சிம்லா செல்ல வேண்டும். நான் பிறகு வருகிறேன்." கூறயபடி குழந்தைக்கு முத்தம் கொடுது விடைபெற்றான்.

ராகுலிடம் இவனை பற்றி கூற வேண்டும் பொறுக்கியாக இருக்கான் என்ன மனிதன் இவன். மனதில் நினைத்துக் கொண்டாள்.

விழா முடிந்து இருவரும் அசதி காரணமாக தூங்கி விட்டனர்.

அடுத்த இருநாள் ராகுலிடம் பேசமுடியவில்லை.

மூன்றாம் நாள் வார இறுதி. ராகுல் வீட்டில் இறுந்தான். இன்று கூறிவிட வேண்டும் முடிவு செய்தாள்.

காலிங் பெல் அடிக்க ராகுல் "யார் அது ? "

என்றபடி கதவை திறந்தான்.

கொரியர் பாய் வாசலில்.

பெரிய பார்சல் ஒன்றை ராகவன் அனுப்பி இருத்தான். அதை பிரிக்காமல் வைஷ்ணவியை அழைத்தான்.

" வைஷ்ணவி , பார் ! ராகவன் பார்சல் அனுப்பி இருக்கான்" என்ற படி பிரிக்க ஆரம்பித்தான்.

"ஏங்க நானே ராகவன் பத்தி பேசனும் நினைத்தேன்." என்றபடி ராகுலின் அருகில் வர

ராகுல் பார்சலை முழுமையாக பிரித்துவிட்டான்.

பிரேம் செய்யப்பட்ட அழாகான ஓவியம் அதில் வைஷ்ணவி அழகாக சிரித்தபடி இருக்க, அவள் கையில் இருந்த குழந்தை அவள் கண்களை பார்த்தபடி.

அதில் கவிதை ஒன்று எழுதப்பட்டு இருந்தது.

" ஆயிரம் பேர் அமர்ந்த சபையில் !

அழும் எனக்கு !

ஆறுதல் கூறி !

அழகான புன்னகையில் அனைவறையும் வரவேற்க்கும் தாயே !

உன் புன்னகையில் என் அழுகையை மறந்தேனே !

ஆயிரம் பிறவி எடுத்தாலும் நீயே என் தாய் ! "

குழந்தை வைஷ்ணவியின் கண்களை பார்த்து கூறுவது போல் எழுதி இருந்தான் ராகவன்.

"வைஷ்ணவி , ராகவன் ஒரு தடவை பார்த்தால் அப்படியே வரைந்து விடுவான். நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் பார்."

என்றான் ராகுல்.

" ஏதோ சொல்ல வந்தாயே ராகவன் பற்றி என்ன ? "

" ஒன்றும் இல்லை . சினிமா துறையில் என்ன பணி செய்கிறார் ? " கேட்டாள் வைஷ்ணவி.

" ஆர்ட் டைரக்டராக பணிபுரிகிறான். " ராகவன் சொல்ல ..

" தவறாக நினைத்து விட்டோமே." தன்னை தானே திட்டிக் கொண்டு போட்டோவில் உள்ள குழத்தையை வருடிவிட்டாள்.

நன்றி முக நூல்

எழுதியவர் : முக நூல் (6-Feb-14, 9:50 pm)
பார்வை : 199

மேலே