அத்தனைக்கும் ஆசைப்படவேண்டுமா

எதற்கும் ஆசைப்படாதே
என்கிறது கீதை.

அத்தனைக்கும் ஆசைப்படு
என்கிறார்கள் இன்றைய
உலகில்.

சொன்னவர்களும் கீதையை
படித்திருப்பார்களோ.

பின் ஏன் இந்த முரண்பாடு.

முயற்சி செய்தால் எந்த
ஒரு விஷயத்தையும்
அடைய வாய்ப்பிருக்கிறது.

ஆசைப்பட்டால் !!!

ஆசைக்கு அர்த்தங்கள் பல.

முயற்சிக்கு ஒரே அர்த்தம் தான்.

ஆசை வந்ததால் மட்டும்
முயற்சிக்கக் கூடாது.

ஒரு குறிக்கோளோடு
முயற்சி செய்.

நீ ஆசைப்பட்டு
பிறகு அதை அடைய
முடியாவிட்டால்,

அந்த ஆசையே அர்த்தமற்றதாகி
விடுகிறேதே.

பிறகு அத்தனைக்கும்
ஆசைப்பட்டு என்ன
பயன்.

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (7-Feb-14, 10:13 am)
பார்வை : 83

மேலே