உசிர வச்சிருப்பதெல்லாம்

மேகம் கூட்டி வந்து
விட்ட மழ

மேளம் கொட்டி கொண்டு
பெய்ஞ்ச மழ


ஓடையில நீர் ஒட
ஒறச்ச மழ

வயசா ஆனவங்க
வெறச்ச மழ

வயசு ஆனவங்க
குளிச்ச மழ

குமரி பொண்ணுங்க
குட பிடிச்ச மழ

மண்ணு மரங்க
குளிர்ந்த மழ

குடிச வீட்டுக்குள்ள
குடி வந்த மழ

ஆத்தங் கரைய
இடிச்ச மழ

அத்தி இத்தி ஆல
சாய்ச்ச மழ

அரசு சாலைகள
அனுமதியில்லாம
மறிச்ச மழ

அரசாட்சி செஞ்சவங்கள
அச்சுறுத்திய மழ

பலரோட குடும்பங்கள
பல பர்லாங்குக்கு
மாத்திய மழ


பொதுவுக்கும் மதுவுக்கும்
தண்ணி கொடுத்த மழ


ஏரி குளம் கிணறு
நிறைச்ச மழ

வானம்..பூமிக்கு
இறச்ச மழ

காய்ஞ்ச பூமியில
பச்ச விரிச்ச மழ

சிலவங்க உசிர
வாங்கிய மழ

மழல கண்ணுக்கு
மத்தாப்பூ ஆன மழ

வெடல பயலுக்கு
வெவரம் சொன்ன மழ


வீடெல்லாம் நனைச்ச மழ
வீட்டுக் குடமெல்லாம்
நிறைச்ச மழ

தெருவெல்லாம் சுத்தம்
செஞ்ச மழ

பருந்துக் கூட்ட
கலைச்ச மழ


இந்தியர் நாம
சேமிக்க மறந்த மழ


நீ..ஓடிப் போனாலும்
திரும்பி வந்திடுவன்னுதான்
நாங்க நெனச்சோம்..!

ஆனா.. இப்ப..

ஓடிப் போனாலும்
திரும்ப வந்திடாத
காதலராய் ஆயிட்டியே..!

நாங்க..
உசிர வச்சிருப்பதெல்லாம்
உன் மேல..!

நீ.. இல்லையின்னா
நாங்க எதுக்கு..?
மண்மேல..!

எழுதியவர் : செ.பா.சிவராசன் (7-Feb-14, 10:56 am)
பார்வை : 97

புதிய படைப்புகள்

மேலே