பொங்குதே இன்பம்

சுரதாவின் இன்பக் கவியை
===சுவைத்திடப் பிறந்த தின்பம்
தேன்தமிழ் பருகிட இன்பம்
===தினமதை போற்றிட லின்பம்

எழுகின்ற எண்ண மதனை
===ஏட்டினில் வடித்த லின்பம்
மழலையின் மலர்ப் பாதத்தை
===முத்தமிட முற்று மின்பம்

புல்லரின் செயல் கண்டு
===பொங்காது வாழ்த லின்பம்
வெற்றிகள் பல சேர்க்க
===வேதனையை மறத்த லின்பம்

மலரினைச் சூடி மகிழும்
===மங்கையராய் பிறத்த லின்பம்
சிற்றின்பக் கயவரையும்
===சீர்திருத்த முயல்த லின்பம்

அறியாமை அகற்ற லின்பம்
===ஆணவத்தை இழந்தா லின்பம்
பூமிதனில் பிறந்த தின்பம்
===புவிபோற்ற வாழ்த லின்பம்

எழுதியவர் : பிரியாராம் (7-Feb-14, 1:27 pm)
பார்வை : 198

மேலே