பெண் சிசு kolai
ஊடலின் போது உருவான கருவை
உலகம் அறிவதற்கு முன் உயிரிழக்க செய்தாய்
வந்திருந்தால் அக்குழந்தையும்
வரலாற்றில் இடம்பெற்றிருக்கும்
காரிருள் மேகம் சூழ
கண்ணகியை பார்த்து
கதி கலங்கிய கதிரவன் இன்றேனும் உதிகவா என
கேட்கச் செய்தவள் பெண்
கள்ளிச் செடியென நினைத்து
களைந்து விட்டாய் ஒரு
கற்பக விருட்சத்தை அளித்து விட்டாய்
பென்யென்றால் பிணமும் வாய்திறக்கும்
என்ற நிலை மாறி
பென்யென்றல் சிசுவும் பிணமாகும் என்றக்கினாஇ
தாதர் என்ற நிலையில்
ததளிகிறாய்
தாவிச் செல்லும் காலம்
தக்க வினா எழுப்ப
தலை குனிந்து விடைச் சொல்லாமல்
இருப்பாய்
நீ செய்த பாவத்திற்கு
தண்டனையை
சிசுவிற்கு அளித்தாய்
இருக்க வேண்டிய குழந்தையை
இறக்கச் செய்தாய்
இருக்க என குறிலாய் இல்லாமல்
இறக்க என நெடிலாய் கற்சித்தாய்
இனியேனும் இதுபோல் இனப் படுகொலை
செய்யாதே
இதயத்தின் ஓரம் இம்சை செய்துவிட்டேன்
இனியேனும் இந்த இனப் படுகொலையை நிறுத்திவிடு
இயற்கையை இன்பமாய் வாழவிடு