பக்கத்து வீடு
நம்ம வீட்டு பக்கத்துல நாலு பிள்ள பட்டினிங்க...
செஞ்சி வெச்ச சோறு எல்லாம் மிஞ்சிடிச்சி...!
நம்ம வீட்டு நாயுங்கூட பசி ஆறிடிச்சி...
மிச்சமெல்லாம் அவங்களுக்கு குடுதிடவா??
கூறுகெட்ட என் சிரிக்கி மண்டையில அறிவிருக்கா!
நா(ன்) ஒழச்ச சோறு எல்லாம் பிச்சைக்காரன் பிள்ளைக்கா??
நம்ம வீட்டு பிரியாணிய பிச்ச நாய்க்கு ஏன் தரணும்??
தட்டி கேட்ட என் சிரிக்கி குப்பையில போடு அத...
பாவமுங்க அந்த பய ஆபத்தில ஓதவிடுவான்...
நம்ம வீட்டு வேல எல்லாம் அள்ளிப்போட்டு செய்திடுவான்...!
நம்ம வீட்டு நாயைவிட விசுவாசம் கொண்டவங்க.
ஒரு வேள சோறுதானே பாவமுங்க போட்டுடுவோம்...
நாலு நாளு பட்டினிக்கு ஒண்ணும் அவன் சாக மாட்டான் !!
என் வீட்டு சோறுதானே கொட்டுறதில் தப்பு இல்ல ...
இப்போ நீயி கொடுத்துபுட்ட நாளா மீண்டும் தட்டுவரும்...!
வாய நீயும் மூடிகிட்டு செமிக்க கொஞ்சம்
ரசமும் தாடி...
கொக்கரக்கோ கோழி கூவி சூரியனும் உதிச்சாச்சி..
சந்த போயி சமைக்க மாமா காய்கறி வாங்கியாங்க.!
எங்க அந்த பக்கத்து வீட்டு வானரங்க ???
கூப்பிட்டு ஒருத்தன்கிட்ட கொடுத்துவிடு ...
அய்யய்யோ ஓடிவாங்க நெஞ்ச(ம்) துடிக்கிதுங்க!!
நொர கக்கி ஆறு ஒடலு உசிரிழந்து கெடக்குதுங்க..
ஓடி வாங்க.. ஓடி வாங்க... என்னான்னு பாத்திடுங்க.
பக்கத்தில கடிதாசிதான் என்னென்னு படிச்சிடுங்க..!!
தெனம் குடிக்க இங்க கஞ்சி இல்ல...
பிள்ளைக்கொரு கல்வி இல்ல...
மானம் காக்க ஆட இல்ல...
படைச்சவன், எடமும் தேடி நாங்க
அடைக்கலந்தான் போறோமுங்க ..
முயற்சியில் தவறிருந்தால் சுட்டிகாட்டவும்......