எழுத்து
யார் யாரோ வந்து சென்றார்...
ஏதேதோ எழுதித் தந்தார்!
வள்ளுவனின் வார்த்தைகள்
வானைப் பிளந்தது!
கம்பனின் கவிதைகள்
கால் தடம் பதித்தது!
பாரதியின் பாடல்கள்
பரிணாமம் தந்தது!
என்னுடைய எழுத்துக்கள்
என்னதான் செய்தது?
... ... ... ... ...
சுற்றாது பூமி...
சுடாது சூரியன்...
சுவைக்காது எதுவுமே -
நான் மட்டும் எழுதாதிருந்தால்!