அன்பு பாசம் காதல் = மனிதநேயம்

நானும் வாழ்க்கை பயணி .
அன்னை காளியம்மா - வின் அன்பு !!
தந்தை கிருஷ்ணன்
அவர்களின் நம்பிக்கை !!..
நிழலையும் நீரையும்
காணாமல் காலம் கடத்தும்
என் கெட்டுபட்டி கிராமம்
இருக்கும் மாவட்டம் தர்மபுரி !!..
என் இதயம் பறித்து !
அதற்கும் சிரித்து !!
"அண்ணா" - என அழைத்து
அன்பை அளிக்கும்
செல்ல தங்கை மூவர் ..!!
என் தனிமை வாழ்வை
அன்பால் நிறைத்து
என்னை மதித்து
நிழலாய் நிற்கும் !!
தங்கை சங்கீதா...
அறிவின் மையத்தில் நின்று
வீரத்தின் விளிம்பில்
விழி வைத்து
கோவம் கொள்ளும் !!
குழந்தை சந்தியா ...
இன்னல் பல கண்டு
பாசமாய் பழகி
புன்னகை பூவை !!
தவறாமல் தரும் தங்கம் பாரதி !
இவர்களை பிரிந்து
எங்கோ வாழும்
எனக்கு
கனவில் வந்து
கன்னம் கிள்ளி
கவிதை சொல்லும் !!
காதலி தேன்மொழி .
காதல் எண்ணம் எல்லாம்
நில்லாமல் நகரும்
நாட்கள் எல்லாம் - ஒருதலையாய்
என் இமை ஓரம்
நித்தம் வரும் - அவள்
நினைவுகளில்
தவறாமல் தடுக்கி விழுகிறேன் !!
மொழிகளின் மூத்தவள்
தமிழன்னை - எனை
அணைத்து - ஏதோ சொன்னாள் !!
நானும் அவள் குழந்தை என்றாள் !!
காதலை மறுத்தாலும் ..!!!
சமூக கல்வி பணியை
சிறப்பாய் செய்து
"உன்னால் ஏன் முடியாது "
எண்ணத்தை அழகாய்
விதைப்பேன் - அன்றும்
என்னவள் என் நெஞ்சில் !!
இது கடினம் என சொல்லி
உடன் வரவே சிற்றுள்ளம் கொண்டு
சிறப்பாய் சிந்திக்கும்
சிறந்த மனிதா..
லட்சியத்தை
நசுக்கினாலும்
நகருவேன்
நம்பிக்கை நடையுடன் .!!
நின்று பாருங்கள் - ஒரு நாள்
நிலவில் சிரிப்பேன் !
உள்ளத்தை உரசி
மனிதநேயம் மலர செய்வேன் !!
--என் வாழ்கை இவ்வளவு தான் ----