பேருந்தும் காதலும்
உன்னுடன்
பயனித்த நாட்களை
நான் குளத்தில் உள்ள
தாமரையாய் நினைத்தேன்..,
ஆனால் நீயோ!
தாமரை இலையின் மேலுள்ள
நீராய் மாறினாய்.
காதலை நீ
பேருந்தாக நினைத்ததுனாலோ
என்னை பயணியாக
நினைத்தாய்?
நான் ஒட்டுனரோ, நடத்துனரோ
இல்லை காதல் உரிமம்
பெற்று உன்னை நேசிக்க..
இது உங்கள் சொத்து என்று கூறிய நீ,
நாளடைவில்
வெள்ளித்திரையின் நகைச்சுவையை
சித்தரித்துவிட்டாய்.
நான் திருமணம் என்னும் படியேறினென்,
நீயோ பேருந்து நிறுத்தம்
என்னும் படியில் இரக்கிவிட்டாய்.
சரிதான் போடி என்று
மாற்று பேருந்தில் ஏற
என் இதயம்
உன்னை போல் தகரத்தால் ஆனதா?
ம்ம்ம்..,
தூய மனங்களால் ஆனது.
ஸ்ரீராம் கிருஷ்ணன்.