சினிமாவும்இஸ்லாமும்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு சினிமா பிரபலம் இஸ்லாத்தை தழுவியது குறித்து பெரியளவில் தூக்கிப்பிடித்துக் கொண்டாடும் சில இஸ்லாமியர்கள் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள் ?
இப்படி கேள்வி பதில் பகுதியில் கேட்ட தமிழச்சிக்கு பதிலே இந்த கட்டுரை.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இதை தூக்கி பிடித்து கொண்டாடும் இஸ்லாமியர்களின் அறிவு அந்த அளவுக்கு உலக செய்தியில் இருந்து தூர இருக்கிறது என்று அர்த்தம்..!
சினிமா என்பது பெரும்பாலும் இஸ்லாமிய மார்க்க விதிகளைத் தகர்த்து வீறு நடைப்போடும் ஒரு வர்த்தகம். அப்படி இருக்க ஒரு சினிமா பிரபலத்தின் மதம் விட்டு மதம் தாவும் செய்கையானது எந்த விதத்தில் இஸ்லாத்தை பெருமைப்படுத்தும் ?
சினிமா மட்டுமல்ல.. ஆபாச பத்திரிகைகள்..தொலைக்காட்சி தொடர்கள்.. மது, மாது, வட்டி, கற்பழிப்பு, கொலை, திருட்டு அனைத்தையும் இஸ்லாம் எதிர்கிறது. ஒரு பிரபலம் இஸ்லாத்தில் மட்டுமல்ல வேறு எந்த மதத்தில் இணைந்தாலும் மதத்துக்கு பெருமை இல்லை..! அதன் உயர்வை எண்ணி தன்னை இணைத்து கொண்ட நபருக்கே பெருமை..! அரசியல் கட்சி தாவினால் ஒருவேளை பெருமையும் பணமும் கிடைக்கலாம்..!
சினிமா என்பது ஒரு ஊடகம்தான். அதாவது சமூக சிந்தனைகளை தொடக்கத்தில் கூட்டம் போட்டு பேசினார்கள்..! பின்னர் அச்சடித்து துண்டு அறிக்கைகளில் பரப்பினார்கள்..! அப்புறம் ரேடியோ மூலம்.. திரை ஒளி மூலம்..சின்ன திரை மூலம்.. இப்போது இணையதளம்...! இதில் எந்த துறையில் ஆபாசம் அனாச்சாரங்கள் புகுத்தினாலும் இஸ்லாம் ஆதரிக்காது..!
சுருங்க சொல்லின் அன்று விடுதலை போராட்டத்தை திரைப்படம் மூலம் மக்களை திரட்ட பயன் படுத்தினார்கள். அன்று ஆதரித்த தலைவர்கள் இன்றைய திரை படத்தை பார்த்தால் அதுபோல் ஆதரிப்பார்களா..?
கேரளத்தில் ஒரு பிரபல எழுத்தாளர் மதம் மாறினார்..! அதுபோல் துபாய் தூதரகத்தில் பணி புரிந்த வடநாட்டு இந்திய அதிகாரி மதம் மாறினார். அப்போது ஒன்றும் மதத்தை முன்னிறுத்தி எவரும் வீண் வாக்குவாதம் செய்யவில்லை. ஆனால் இந்த தமிழ் இனம் மட்டுமே எங்கும் ஜாதி மதத்தை நுழைத்து தனக்கு தானே அழிவை தேடி கொள்கிறது. அது சிறு தளமாக இருந்தாலும் சரி.. பெரும் போர் களமாக இருந்தாலும் சரி..! அதன் சமீபத்திய உதாரணம்தான் ஈழ போர் தோல்வி..!
இஸ்லாம்.. இந்து.. கிருஸ்துவ.. புத்த... யூத.. நாத்திக கொள்கை இப்படி ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்துக்கு ஒருவர் மாறுவதால் மதங்களுக்கு இழப்போ.. இழிவோ..பெருமையோ கிடைக்கிறது என்பதை ஏற்று கொள்ள முடியாது.
இன்னொரு விஷயம்... இஸ்லாத்தில் அதன் கொள்கைக்காக அதை ஏற்று கொள்வது மட்டுமே சிறப்பு..! இன்னொரு காரணத்துக்காக இந்த மார்க்கத்தை (பெண்,பொன்,மண்) ஏற்று கொள்வதால் அவருக்கு எந்த சிறப்பும் கிடைக்கபோவது இல்லை..!
இந்த கேள்வி வர காரணம் நீங்கள் ஒரு "தமிழச்சி" ஆனதால்..!! மதத்தையும் ஜாதியையும் வைத்து மோத விடுவது என்றால் அப்படி ஒரு மகிழ்ச்சி இந்த இனத்துக்கு மட்டும்..!