வேலை விதிகள்-

வேலை விதிகள்:-

1.யாருமே செய்யாத ஒரு வேலையை நீங்கலாக எடுத்து செய்தால், இனி வரும் வேலை முழுவதும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும்..

2.மேனேஜர் உடைச்சா, பொன் சட்டியும் மண் சட்டியே.

3. உங்கள் திறமைகளை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். அதற்கு உங்கள் மேனேஜர் இருக்கிறார்.

4..பிடித்த பெண்ணிடம் லவ்வை சொல்வதை விட கஷ்டமாயிருக்கிறது, மேனேஜரிடம் லீவு சொல்வது.

5.மேனேஜருக்கு ஜால்ரா அடித்து வாழ்பவனே வாழ்வர்! ஏனையோர் மாங்கு மாங்கு என வேலை செய்தே சாவர்!

6.மேனேஜர் நம் மீது காட்டும் அன்பும், கசாப்புக் கடைக்காரன் ஆட்டின் மேல் காட்டும் அன்பும் ஒன்றே என்பதறிக.

7.பிராஜெக்ட் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். மேனேஜர் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை.

8.மேனேஜர்களின் அகராதியில் மிக பிடித்த
வார்த்தை 'ok sir' என்பதாகவும், அறவே பிடிக்காத வார்த்தை 'why sir' என்பதாகவுமே இருக்கும்..

9.அலுவலகத்தில் மேனேஜர் மிஸ்டர் என்று உங்கள் முழுப்பெயரையும் கூப்பிட்டால் நீங்கள் பிரச்னையில்
இருக்கிறீர்கள் என்று அர்த்தம்..

10.மேனேஜர் பார்க்கும் போது தீயா மட்டுமல்ல.. நாயா வேலை செய்யனும் ..!

எழுதியவர் : முரளிதரன் (11-Feb-14, 9:22 pm)
பார்வை : 147

சிறந்த கட்டுரைகள்

மேலே