என் மனநிலை நிலவரம்

சிறகடித்து பறக்கிறது
பட்டாம்பூச்சியாய் மனம்
மயில்தோகை விரிப்பாய் என்
முகமெங்கும் சந்தோஷம்
மான்குட்டியாய் உற்சாகதுள்ளலாய்
தேகமெங்கும் ஆனந்தம்.


காதல் வானில்
நானும் அவளும்
பகலவனும் சந்திரனுமாய்
இன்பம் துன்பம்
எதுவும் எங்களுக்கில்லை.

புலியின் வீரம்
யானையின் பலம்
பூவின் மென்மை
கயலின் அழகு
சிங்கத்தின் கம்பீரம்
குதிரையின் வேகம்
என்று நட்புவனத்தில்
அழைத்து எந்தன்
திறமை திரைசீலையில்
என்னையே காட்டுகிறாள்.
என் இருண்ட வாழ்வில்
தீயாய் வந்தவள்
ஒளியாய் விளக்கு ஏற்றுகிறாள்.

என் கவிஜன்னலுக்குள்
உட்புகுந்த தென்றலே !
என் இதய ஓவியமே..!
நீர் இன்றி நமக்கு ஏது உலகம்..!
நீயின்றி எனக்கு ஏது உலகம் ..!


``````````````````````````இரா.சந்தோஷ் குமார்.



----------------------------------------------------------------------------
படைப்பின் பிண்ணனி :

வண்ணத்துப்பூச்சி, மான், மீன், மயில்,புலி,சிங்கம்,குதிரை, பூ

சூரியன், நிலா, ஒளி, இருட்டு
ஜன்னல், திரைசீலை, விளக்கு, ஓவியம்

இத்தனை திணையும் கவிதையில் வரவேண்டும் என்று அன்பு கட்டளையிட்டு என்னை கவிதை எழுத சொன்னார், இந்த தளத்தில் இருக்கும் தோழி ஒருவர். அவருக்கு என் நன்றி.

10 நிமடத்தில் என்னால் இவ்வளவுதான் சிந்திக்க முடிந்தது தோழி. மன்னிக்கவும்.
----------------------------------------------------------------------------

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (12-Feb-14, 8:59 am)
பார்வை : 539

மேலே