சென்ரியு-II-கே-எஸ்-கலை

உயிர் கொலை தப்பு
உரத்து பேசினார் பேச்சாளர்
பட்டு வேட்டியுடன் !
╰☆╮
உள்ளோரும் இல்லாரும்
எப்போதும் உடுத்துகிறார்கள்
கந்தலாடை !
╰☆╮
ஒன்றுமே இல்லாத வீட்டில்
ஓடிப் பிடித்து விளையாடுகிறது
வறுமை !
╰☆╮
எம்மதமும் சம்மதம்
உலகிலேயே சிறந்தது
எம் மதமே !
╰☆╮
தண்ணீருக்கு தாகம்
குடிக்கத் தொடங்கியது
உயிர் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (12-Feb-14, 9:07 am)
பார்வை : 252

மேலே