காதல் பரிசு 2
காதல் பரிசு 2
கண்ணே மானே தேனே
உயிரின் உயிரேயென
தேனொழுகு வாய்மொழியைக்
காதல் பரிசாகத் தந்தவன்
மணவாழ்க்கை நெருங்கிய வேளை
வரதட்சணை தொகை பெரிதென்று
பெற்றோர் பார்த்த பெண்ணை
மனையாளாக்க
காதல் பரிசாய் கைகழுவல் துயர்
தந்து சென்றவனின்
காதல் நினைவோடு வாழ்ந்து
காலம் கடத்தியவள்
சமூகம் குத்தலாகத் தந்த
முதிர்கன்னி பட்டத்தையும்
புன்னகையெனும் பொன்நகையாய் ஏற்றாள்
மனம் மாறா உண்மைக்
காதல் பரிசாய்...!!
.. நாகினி