தேயிலை தோட்டத்து தேவதை

சூரியன் உதிக்குமுன்னே மூங்கில்
கூடையதை முதுகில் சுமந்துகொண்டு
முந்தானை மாரொரு இருக்கு
அணைத்துக்கொண்டு உறையும்
குளிரில் உணவைத்தேடி செல்லும்
மலையரசியின் இளவரசிகள் எனினும்
இவர்களே அவர்களை சேவகர்கள்
பனித்திவலைகள் தழுவி நிற்கும்
துளிர் இளம் தளிரதை கிள்ளியெடுத்து
காலை முதல் மாலைவரை களைத்து
கஸ்ட்டமதை மறைத்து புன்னகையோடு
வாசமிழந்த பூக்களாய் வாடினிற்க்க
வாசம் நுகர்ந்து வண்ணம்பூசிய நடிகர்
வண்ண தொலைக்காட்சி பெட்டியில்
தேநீரின் சுவைதனை ருசித்துகாட்டி
உடல் நலத்திற்கு நல்லதென்று சொல்லும்
கட்சிக்கு பின்னே தெரியாமலேபோனது
இந்த தேவதைகளின் வேதனைகள்
ஆம் இவர்கள் போராளிதான் எசமான்
வெற்றி பெற்று உச்சம் சென்றபின்னும்
நித்தம் தோற்று நிற்கும் போராளிகள்,,,,
என் தேயிலை தோட்டத்து தேவதையே
நான் சுவைத்து குடிக்கும் தேநீரில் உன்
வேதனையின் வாசம் உணர்கிறேன் ,,,,,

தேயிலை தோட்ட பு(ண்)ன்னகையோடு ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.......

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (12-Feb-14, 7:35 pm)
பார்வை : 98

மேலே