குடியின் சீரழிசிறப்பு

வான் பார்த்த பூமி
வெடித்து பிளந்த நிலம்
என் நாட்டில் தண்ணீர்
பஞ்சமுண்டு இந்த
தண்ணிக்கு இருந்ததில்லை
பஞ்சமென்றும்
நாட்டை தலைனிமிர்த்தி பிடிக்கும்
என் தள்ளாடும் "குடி"மகன்
இது கண்டு என் குல
பெண்களின் கண்ணீருக்கும்
பஞ்சமில்லை
அதை கொஞ்சம் மறக்கவோ
நாகரீக நாட்டுப்புற
மாதுவுமிங்கு மதுவில்
மதிமயங்கி மானம்விற்று
மண்ணின் மணத்தையும்
அன்றோ விட்டுவிட்டனர்
மது மயக்கத்திலிருந்து
மீண்டுகொள் மனிதா,,,
மதுவே உன் துணையாய்
புகையும் சேர்ந்தது
உன் நெஞ்சு கூட்டு
ஓட்டைக்கு மட்டுமா
ஓசோன் படலத்து ஓட்டைக்கு
அது ஒரு காரணம்தான்
புறம்தள்ளும் புகையின் இரு
பங்கு உன்னுள்ளில்
இருமிமே இறக்கமலிருக்க
இன்றே நீ புகைக்காமலிரு
புரச்சிவேண்டாம் உன்
புன்னகை இதழிலிருந்து
இடையில் வந்ததை இன்றேனும்
பு(ன்ன)கை தடைசெய்
சத்தியம் ஒரு சடங்காகிவிட்ட
இத்தருணத்தில் நாம்
வரும் புத்தாண்டிலாவது
புகைக்கு பூட்டிட்டு
மதுவை மண்ணில் புதைத்து
சத்தியமாய் ஒரு சத்தியம்
செய்வோம் சாதிக்க நாம் .....

புகையிலிருந்து மீளத்துடிக்கும் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்,,,,,,

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்,, (12-Feb-14, 7:37 pm)
பார்வை : 356

மேலே