வரம்
கதைகள் பேசி
பல வித்தைகள் செய்து
கண்கள் மூடாமல் என்னை
அமர வைத்தாய் !
உன் தூரம் என்னை வதைத்து
எடுக்கையிலும் உன் மடியில்
படுத்து உறங்கிய நிமிடங்கள் எல்லாம்
கண் முன்னே வரிசையாய்
என்று பார்ப்பேன் என்று தெரியவில்லை
உன் முகத்தை
என்றுமே பிம்பமாய்
என் கண் முன் நீ!
மீண்டும் கருவாகி
உன்னுள் சென்று
மீண்டும் பிறந்து
உன் மடியில் தவழ ஆசை அம்மா
எனக்கு!
எல்லாம் கொடுத்தாய்
நான் மகிழ்ச்சியாக வாழ !
இந்த வரம் தருவாயா ???
உன் முகம் காண தவிக்கும்
உன் மகள்