காலங் காத்தாலே கலப்பையோடு

ஏலே செவத்தம்மா எங்கடி நீ போயிட்டே
வேப்பெண்ணதான் தேச்சு நேர்வகிடேடுத்து
பெருசா கொண்டபோட்டு சட்டுன்னு ஓடிவா
ஏர்பூட்டி காத்திருக்கே சீக்கிரமா வாபுள்ள
கஞ்சி கலையமும் சுட்டுவெச்ச கருவாடும்
மறக்காம எடுத்துகிட்டு சுருக்குனு வாடியம்மா
வெயில் மெல்ல ஏறுமுன்னே உழ போகிடனும்
மானமும் கருத்திருக்கு மழைபெய்ய போகுபோல
வேருசாக வந்துருடி வெவரமுள்ள சின்னபுள்ள
அந்தி சாயுமுன்னே சந்தைக்குந்தான் போயிரனும்
மறக்காம மஞ்சப்பைய மடியில் நீ சொருகிக்கோடி
மஞ்சளுனக்கு வாங்கியாரே மச்சான கட்டிக்கடி
ஏலே செவத்தம்மா எங்கடி நீ போயிட்டே ,,,,,

கிராமத்து காலையொடு ,,,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (12-Feb-14, 7:34 pm)
பார்வை : 252

மேலே