கத்திரிஎந்திரிதந்திரி

கத்திரி...எந்திரி...தந்திரி...

அதிவேகத்தைக் கத்திரி
அதிபோகத்தைக் கத்திரி
அதிசோகத்தைக் கத்திரி
அதீதநம்பிக்கையோடு எந்திரி
அதிசய பிறவியாக்கும் தந்திரி

துவேசத்தைக் கத்திரி
வேசத்தைக் கத்திரி
நாசத்தைக் கத்திரி
பாசத்தோடு எந்திரி
பாதை மாறா தந்திரி

ஆணவத்தைக் கத்திரி
ஆத்திரத்தைக் கத்திரி
ஆழிபேராசையைக் கத்திரி
ஆற்றல் எழுச்சியோடு எந்திரி
ஆர்வம் பயிற்சி பெற்ற தந்திரி....!!

.... நாகினி

எழுதியவர் : நாகினி (12-Feb-14, 7:30 pm)
பார்வை : 56

மேலே