ஆண் இனம்
என் மனதில் உதித்த வார்த்தைகளை கவிதையை வடிக்கிறேன்
ஆண் இனம் என்ற இனத்தின் வாழ்கை ஓட்டத்தை பதிவு செய்கிறேன்
குழந்தை பருவம் முதல் பத்தாம் வகுப்பு வரை குழந்தையாக சித்தரிகபடுபவன்!!!!!!
தனது 16 வயதிலே வாலிப பருவம் அடைகிறான் அது வரை தனது குடும்பத்திற்கு குழந்தையாக தெரிந்தவன் இப்பொழுது தனது குடும்பத்தை தாங்க போகும் ஆணிவேராக தெரிகிறான்!!!!
காலசுற்றலில் அவனது மழலை மாறி குழந்தை பருவம் அகன்று தனது குடும்பத்தை எப்படி காப்பாற்ற போகிறோம் என்ற கேள்விகளோடு வாழ்க்கையை தொடர்கிறான்!!!!!!
கண் எதிரில் நிற்கும் தனது அக்கா தங்கையை எப்படி கரையேற்ற போகிறோம் என்ற தவிப்பு!!!!!!
தன்னை பெற்ற தாய் தந்தையை எப்படி காப்பாற்ற போகிறோம் என்ற துடிப்பு!!!!!!
கல்யாணம் அது முதல் நாளில் திருவிழா
முன்றாம் நாளில் இருந்து இருதலை கொல்லியாக அலைகிறான்!!!!!!
அடுத்த பருவத்தில் தன் குழந்தை மற்றும் தன்னை பெற்றவர்க்கும் தாயாக மாறுகிறான்!!!!!
அடுத்த பருவத்தில் தனது மனைவி மக்களின் தேவையை பூர்த்தி செய்கிறான்!!!!!!!
மீண்டும் ஒரு காலசுற்றல் தந்தை தாத்தாவாக மாறுகிறான்
இறப்பு !!!!!!!!!
கடைசியில் அவன் தேடும் ஒரு மாத்திரை
இப்படி காலஒட்டதை நாம் கண்முன்னால் கண்டால்
ஒரு மகன் தன் தாய் தந்தையரை தெருவில் விடமாட்டன் !!!
ஒரு மருமகள் தன் மாமனார் மாமியாரை தெருவில் விடமாட்டாள்!!!