காக்ககாக்க
குருதி யாற்றில் நீந்திக் கடந்து
குடும்பத்தை யெல்லாம் மறந்து கிடந்து
சத்திய சோதனை தாங்கி நின்று
பெற்றிட்ட சுதந்திரம் கண்டீரோ!!
அன்னை பூமியயை அடிமைக ளாக்கி
அயலா னெல்லாம் ஆண்டு நிற்க
எங்கள் சக்தியை கண்ட உடனே
எடுத்த ஓட்டம் அறிவீரோ!!
இன்றோ,
சாதிப் பூசலும் சமய வெறிகளும்
சாக்கடை போல புரண்டு நிற்க
காந்தியின் இலட்சியம் கனவாய் போவதோ!
பாரதிக் கனவு மண்ணில் புதையவோ!!
இளைஞனே,
உன்னில் உள்ளது தீயின் வேகம்
உறங்க வைப்பது விதன்டா வாதம்
தட்டி யெழுப்பினால் சுடர் விடு!
கொட்டி யெழுப்பினால் சுட்டு விடு!!
இறப்பு என்பது ஒரு முறை தான்!!
அது இன்றே னேரினும் நன் முறைதான்!!
காக்க காக்க பாரதம் காக்க!!
காவாக்கால் உன் உயிரை நீக்க!!!
ஜெய்ஹிந்த்!!!!!