இனிசியலு

வெய்யில்ல காய்ஞ்சு
கருவாடத் தோற்கடிச்சு
மழையில நனைஞ்சு
குடைய தோற்கடிச்சு

பட்டினியா கிடந்து
பசியையும் தோற்கடிச்சு
படிக்க வச்சான் இசக்கி
பட்டணத்தில் மவனை

படிச்சி முடிச்சி வந்த
இசக்கி மவன் பாண்டி
தெருவோரம் நடக்கையில
கூப்பிட்டான் ஓர் ஆண்டி

இசக்கி மவன் பாண்டி
என கூவியவனை பார்த்து
சொன்னானே பாண்டி
எம் பேரு E.பாண்டி

அப்பன் பேரை தோற்கடிச்சு
ஆகிபுட்டான் பாண்டி
அரசு அதி காரி!

எங்கிருந்து வந்துச்சோ
இங்கிலிபிசு இனிசியலு!
மாத்துவாரு யாருமுண்டா?
சேர சோழ பாண்டியரு!

மாத்திப்புட்டா அவருதான்
வருங்காலம் பேசும்
சங்கத் தமிழ் காத்த
மன்னாதி மன்னரு!

எழுதியவர் : உமர்ஷெரிப் (13-Feb-14, 10:52 pm)
பார்வை : 96

மேலே