தமிழதிகாரம் செய்வது எப்படி

முகநூலில் முடங்கி கொண்ட
தமிழரை யெல்லாம் தமிழ்நோக்கி
தளமிழுப்பது எப்படி ?

அண்டம் பேசும் அத்தனைக்கும்
முதுமையாம், தரையில்லா தமிழ்மொழியின்
தரைதொடுவது எப்படி ?

சிதறியோடும் சிந்தயெல்லாம் சிறைபிடித்து,
தமிழ்த்தேன் குழைத்து, வெண்ணிறபுரவியின்
வெண்மையினும் வெள்ளையாய், தூயதமிழ்
பேசுவது எப்படி ?

அழிந்துவரும் அரிய பைந்தமிழ்
பழஞ்சொல் தேடித்திரட்டி, செந்தமிழ்
நுழைத்து. நற்கவிதிரித்து, தென்தமிழ்த்
தேரிழுப்பது எப்படி ?

ஆங்கிலம் கலவாது அழகழகாய்
நற்தமிழ்பேசும் நாப்பழக்கம் நாகரீகநஞ்சால்
நக்கித் துடைக்கப்பட்டதென நாட்டுக்கு
நானுரைப்பது எப்படி ?

நகரீகமென தானினைத்து டங்குலீசுபேசும்
தம்பிகளுக்கு நகரீகமெனும் நற்சொல்லே
நாம் விதைத்ததென, பறையடித்து
பகிந்துணர்த்துவது எப்படி ?

பிளையிட்டது தளத்திற்கே பிஞ்சென்றாலும்
முன்நின்று முகமுவந்து பிழைநீக்கும்
தமிழொன்றே தனக்கென்றணிந்த தமிழ்பித்தனின் தடம்தொடர்வது எப்படி ?

வயலோடும் வரப்போடும் உறவாடி
விளையாடும், தென்றலுக்கு தலையாட்டும்,
நெற்குதிர் மறந்த நெல்நாத்துக்கிடையே
நாட்டுபுற பாட்டுரெண்டு நட்டு
வளர்ப்பது எப்படி ?

பசியென்றாலும் பால்தவிர்த்து பசியணிந்திருக்கும்
சின்னஞ்சிறு குழந்தையின் சின்ன
செவிகளில் தங்கத்தமிழ் நுழைத்து
தலாட்டிசைப்பது எப்படி ?

வகைவகையாய் வாழ்வியல் சொல்ல
வள்ளுவ னிருக்க மாற்றான்
தாயென நம்மண்ணில் நுழைந்திட்ட
மற்ற மொழிகளை மறுத்து
ஒதுக்குவது எப்படி ?

வந்தாரை வாழவைப்பதே மரபென்று
வந்தேறிகளால் வீழ்ந்திட்ட தரணியாண்ட
தமிழா.. வா!!
கொஞ்சம் வஞ்சகம் படிப்போம்...

எழுதியவர் : அமுதன் பரிமளசெல்வன் (14-Feb-14, 12:37 am)
பார்வை : 209

மேலே