ஈழத்து கண்ணீரின் குற்றபத்திரிக்கை
அமா வாசைக்கு
காத்திருக்கும்
சற்றிருண்ட வானம்
ஊரெங்கும் நிசப்த
அலை.....
இருட்டை கிழித்து
சீறும் நீள் வெள்ளை
வாகனம்....
வண்டியினின்று
வெளிபட்ட மனித
ஓநாய் கூட்டம்
கதவிடிக்க....
திறந்து
கொண்டேன்.....
வந்த மிருகங்கள்
என்னவரை தரை யிலிழுத்து சென்றன.....
என்னாசை மகளை
என்னெதிரே தன்
பசி யடக்கி
கிழித்தெறிந்தன....
என்னவர்
என்னானரோ?
வாய்க்காலருகே
ஆணுறுப்பின்றி
ஓருடல் ஒதுங்கியதாய்
செய்தி......