தூய எண்ணங்கள்

மாலையோடு நீயிருக்க
மண மாலை கனவோடு நானிருக்க
மன்மதக் கனவுகள் மனதிலுருக்க
மனதில் நினைவுகள் நிலைத்திருக்க

கற்பனை தேரில் நாமிருக்க
காலம் மாறாமல் நாம் களித்திருக்க
கட்டுண்ட நேரம் இனித்திருக்க
கடமைகளெல்லாம் ஒளிந்திருக்க

இன்பத்தின் எல்லையை தேடிடுவோம்
இயல்பாய் அதை வென்றிடுவோம்
இணைந்து இருப்பதே சுகமென்பொம்
இதற்கும் மேலாய் என்னவென்போம்

அரவணைத்து அள்ளிப் பெறுவது சுகம்
அனைத்தும் நமக்கே என்குது மனம்
ஆனந்தம் பெற்று மகிழ்வாய் தினம்
ஆரவாரம் தள்ளி விடு புறம்

தூக்க கனவுகளில் இவையே வந்து போக
தூங்காமலிருக்க நான் நினைந்து இருக்க
தூய எண்ணங்கள் ஒன்று சேர
துயரங்கள் என்றும் வாராது.

எழுதியவர் : arsm1952 (14-Feb-14, 7:00 am)
பார்வை : 433

சிறந்த கவிதைகள்

மேலே