காதலர் தினம் - தினம் தினம்

யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே
உனக்காக தன்னையே மாற்றிகொள்பவர் கிடைத்தால்
அவர்களை தொலைத்து விடாதே வாழ்நாளிலே
தொடர்ந்திடு நலுறவினை என்றும் அன்போடு ...
பெற்றவர் உற்றவர் கிடைத்தாலும் சரியாமோ
உற்ற நல்வுறவு நமக்கு கிடைத்துவிட்டால்
அல்லதை செய்யா நல்உறவு நமக்கு
என்றென்றும் வேண்டுமே நல்வாழ்வினை தொடர ...
கற்றதனால் பயனுண்டு நல்வாழ்வினை நெறிபடுத்த
பெற்றதனால் பயனுண்டு நல்னன்பர்கள் துணைகொண்டு
விற்றதனால் பயனுண்டு விளைபொருட்கள் சந்தையிலே
பற்றியதால் பயனுண்டு நல்உறவுதனை என்றென்றும் ...
கரைசேர்க்கும் நல்உறவு வாழ்க்கையெனும் பெருங்கடலில்
உரை சேர்த்தால் பாக்களும் உயிர்பெறுமே
பறை சாற்றி சொல்லிவிட்டால் இவையாவும்
உறவை மேன்படுத்தும் நிகழ்வுகளே ஆகும் ...
காதலில் கட்டுண்டால் கவனம் தேவை
காதலில் தோல்வி ஒன்று இல்லாவிட்டால்
காதலைப் போல் நல்லசொற்கள் உலகிலுண்டா
காதலிப்போரே சிந்திப்பீரே இதனை என்றும் ...
காதலர் தினத்தினை கொண்டாடும் நற்காதலர்கள்
காதலை பரிமாற துடித்து நிற்கும்
காதலின் பரிமாணம் தனை உணர்ந்து
காதல் தான்செய்வீரெ நல்இதயங் கொண்டு ...!
காதலர் தின வாழ்த்துகளுடன்
ந தெய்வசிகாமணி