காதலர் தின வாழ்த்துக்கள்

பேய் மழையில் நனைந்த
பேனாவின் சித்திரம் போல்

நீயில்லா வெற்றிடத்தில்
நிர்கதியாய் என் பூமி

பேயோட்டும் கோடாங்கியாய்- உன்
பேச்சின் பதிவுகளில்
பிதற்றிக் கொண்டிருக்கிறேன்.

இறங்கி வருதல்
இன்னும்
சாத்தியப் படவில்லையோ ?

நான் காதலிக்கும் என் காதலியே
உனக்கு என்
காதலர் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : ராசைக் கவிபாலா (14-Feb-14, 5:28 pm)
பார்வை : 124

மேலே