காதல் திருநாள்

பெண்ணே உனை கண்டு
சன்ன மானேன் இன்று!
முத்த மிட உன்னை
பித்த மான என்னை

தூக்க மின்றி கண்கள்
துக்கம் கொண்டு ஆடின!
ஆட்டம் நின்று கண்ணின்
நோட்டம் நிலை நின்றன!

அக்கு வேறு ஆணி வேறாய்
ஆக்கி விட்டாய் சுக்கு நூறாய்
திக்கு திசை தெரி யாமல்
திக்கு முக்கு ஆடி விட்டேன்!

கிட்டத் தட்ட பைத்தியமாய்
கெட்டு விட்ட வாத்தியமாய்
மூச்சு மட்டும் கொஞ்சம்
விட்டு விட்டு வாழ்கிறேன்

வருவாய் நீ ஒருநாள் என்று
வளமா வேன் திருநாள் அன்று!

எழுதியவர் : உமர்ஷெரிப் (14-Feb-14, 7:47 pm)
சேர்த்தது : உமர்
Tanglish : kaadhal thirunaal
பார்வை : 112

மேலே