ஆணாதிக்கம்
மனதிற்குள் புழுங்கும் மனைவிகள் சார்பாக .
தாலி கட்டிய ஒரே காரணத்திற்காக சொல்வதை எல்லாம் கேட்டே ஆகா வேண்டும் என்று எழுதாத சட்டம் போடும் கணவன்மார்களே .
எங்களுக்கும் மனம் என்ற ஒன்று இருப்பதை மறந்தீர்களா.
இல்லை மனதே இருக்க கூடாது என்று நினைத்தீர்களா.
ஆண்களை விட தைரியம் உள்ளவர்கள் பெண்கள் என்பதை ஏன் ஒப்புகொள்ள மறுப்பதும் ஏன்?
20 வருடம் உடன் வாழ்ந்த தாய், தந்தை, தம்பி, அண்ணன், அக்கா என்று அனைவரையும் விட்டு உன் குடும்பம், உன் உறவுகள் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்று ஏன் எழுதாத சட்டம் போடுகிறிர்கள்.
நீகள் ஒரு நிமிடம் உன் தாய், தந்தையை விட்டு பிரிகிரீர்களா? உங்களுக்கு யாரோ ஒருவர் துணை இருந்து கொண்டே இருக் வேண்டும் என்று நினைகிறீர்கள். உன் குடும்பத்தில் உள்ள யாரை பற்றியும் எதுவும் தெரியாமல் உன்னையே நம்பி வரும் பெண்களை , அனைவரையும் அனுசரித்து போ என்று சொல்லும் நீங்கள் எங்கள் உணர்வுகளுக்கு ஏன் மதிப்பளிப்பது இல்லை. ஆண் என்ற ஈகோ உங்களை ஆடிபடைப்பதை ஒப்புகொள்ளத்தான் வேண்டும்.
எல்லாவற்றையும் உங்களுக்காக தியாகம் செய்யும் எங்களுக்காக என்ன செய்கிறீர்கள்.
பொருளாதார நிலைக்காக சின்ன குழந்தையை குட விட்டுவிட்டு வேலைக்கு சென்று வரும் பெண்ணை நீங்கள் தாங்க வேண்டாம்.
அன்பாய் ஒரு பார்வை, பாசமாய் இரு வார்த்தை பேசுவதற்கு கூட உன் ஈகோ தடுப்பதுதான் வேதனையான விஷயம்.
அப்படி எல்லாம் கிடையாது என்று மறுக்காதீர்கள். ஆயிரத்தில் ஒரு ஆண் தான் விதிவிலக்காய் பெண்ணின் மனதை புரிந்து கொண்டு வாழ்கிறான் என்பதை ஒப்பு கொள்ளத்தான் வேண்டும்.