இது தந்தையின் தாலாட்டு

===இது தந்தையின் தாலாட்டு===
ஆராரோ ஆரிராரோ
அன்னையவள் பாடணுமோ?
தங்கத்திருமகனே
தயக்கமின்றி நீயுறங்கு!
பாசமதை காட்டிடவே
பாட்டியும்தான் இங்கில்லையே!
பரிவுதனை காட்டிடவே
அத்தையும்தான் இங்கில்லையே!
அன்புத்திருமகனே
அரசாள்வாய் என்மகனே!
உன்னழகை கண்டாலே
உறவெல்லாம் வந்து சேரும்!
பொருள்சேர்த்து உனைவளர்க்க
பொறுப்புடன்தான்நானிருக்க!
அன்பு மொழிபேச
அன்னையும்தான் இங்கிருக்க!
கலக்கமது வேண்டாமே
கண்மணியே கண்ணுறங்கு!
தாலாட்டு பாடிடவே
தந்தையும்தான் வந்திருக்கேன்
காதோரம் தமிழ்க் கேட்டு
கலக்கமின்றி நீயுறங்கு !

எழுதியவர் : vijay kuncharan FB (15-Feb-14, 12:16 pm)
பார்வை : 68

மேலே