மொபைல் போன்

ஒருவர் டாய்லெட்டில் அவருடைய விலையுயர்ந்த ஆப்பிள் ஃபோனை உள்ளே போட்டுவிட்டார்.

ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சே! குய்யோ முறையோ என அலறி அழ ஆரம்பித்தார்.

இந்த ஆளின் கத்தல் தாங்காத டாய்லெட் தேவதை, அவர் முன்னே தோன்றி, "ஏன் இப்படி ஊளையிடுகிறாய்" என்றது.

இவரும் கதையைச் சொன்னார்.

படக்கென மறைந்த தேவதை, ஒரு சில நிமிடங்களில் தகிக்கும் தங்க நிறத்தில் ஒரு ஃபோனைக்கொண்டு வந்து கொடுத்தார்.

இவர் ஏற்கனவே விறகுவெட்டி (தங்கக்கோடாரி) கதைகளை கேள்விப்பட்டிருந்ததால், மிகவும் நேர்மையாகவும், நியாயமாகவும் இருப்பதற்காக,

"தேவதையே, என்னுடையது சாதாரண் ஃபோன் தான். தங்கத்தால் ஆனது அல்ல" என்றார் பவ்வியமாக!

உடனே அந்த தேவதை,"ஏ மூதேவி.. இது உன்னுடைய ஃபோன் தான், நன்றாக கழுவி விட்டு உபயோகப்படுத்து" என்று கூறிவிட்டு மறைந்தார்.!!! ??

கதை கருத்து:யாரும்
டாய்லெட்ல mobile phone use பண்ணாதீங்க pls....

எழுதியவர் : முரளிதரன் (15-Feb-14, 5:42 pm)
Tanglish : mobile phone
பார்வை : 238

மேலே