கவிதை பெண்ணே
கவிதைப் பெண்ணே கவிதைப் பெண்ணே
எங்கே சென்றாய் என் உயிர் கண்ணே!
தொட்டு தழுவிய என்னை நீ
விட்டுச் சென்றாயே...!்
கூடி குலவிய நீ
விட்டுச் சென்றது முறையோ?
நீ இன்றி நானேது
நரம்பறுந்த யாழ் பாரு....
உன் ஈர்ப்பு விசையன்றி
என் உலகம் எங்கணம் இயங்கும்...
எழுதா விரல்
இருந்தென்ன? இறந்தென்ன?
மை கொண்ட பேனாவும்
மையல் கொண்ட காகிதமும் ்
மயங்கி தவிக்கிறது..
மங்கை உன் உறவை தேடி
கவிதைப் பெண்ணே கவிதைப்பெண்ணே
கட்டித்தழுவி விடு...
கட்டிப்போட்ட கற்பனை குதிரையை
தட்டிப் பறக்க விடு
எழுதி குவிக்க ்
எண்ணம் தந்து என்னோடுகலந்துவிடு
வண்ணம் சேர்க்கும் கவிதை தந்து
கற்பனை மீட்டி விடு...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
