நீ என்னை மறந்திருக்கலாம்

எனக்கான நினைவுச் சின்னங்கள்
எதையும் நான் விட்டுவைக்கவில்லை……..
உன்னிடமும் எதையும் நான் வாங்க வில்லை
அதனால் நீ என்னை மறந்திருக்கலாம்!!!!!

காலையின் பரபரப்பும் கண்களின் தூக்கமும்
உன்னை இன்னும் ரசிக்க வைத்தன…..
வேலைப் பளுவினால் உனக்கு வியர்த்தது
அதனால் நீ என்னை மறந்திருக்கலாம்!!!!!

தேவை ஒரு தங்கை என
தேடித் தேடி அலைகிறேன்……
உனக்கு அண்ணன் உண்டோ?
அதனால் நீ என்னை மறந்திருக்கலாம்!!!!!

அத்தனை அழுத்தத்திலும் அழகாய்ச் சிரித்தாய்
அன்பின் ஆயுதத்தைக் கண்டேன் நான்
என்னைப் போல் ஆயிரம் பேரோ?
அதனால் நீ என்னை மறந்திருக்கலாம்!!!!

மனம் உன்னை மறந்தாலும்
உன் நினைவுகள் அழிந்தாலும்
உன் பெயரை நான் மறவேன்
இந்தப் பெயர் கொண்டவளா நீ?
அதனால் நீ என்னை மறந்திருக்கலாம்!!!

எழுதியவர் : ஹரி (15-Feb-14, 7:49 pm)
சேர்த்தது : ஹரி பிரசாத்
பார்வை : 777

மேலே