வாசகர் எங்கே

எழுத்தாளர் படைக்கிறோம்!
வாசகர்கள் எங்கே !

கவிதை வடிக்கிறோம்!
கவிஞர்கள் படிக்கிறோம் !
கருத்துக்கள் பரிமாறி கொள்கிறோம் !
வாசகர் எங்கே? எங்கே? என
வாசலில் எதிர் பார்க்கிறோம்!

இதயத்தை தொட்டு திரும்பும்
உன் வசந்த காற்றை எதிர்நோக்கி
எல்லோரும் இங்கே!
நீ மட்டும் எங்கே !

மனைவியின் சமையல்
கணவனின் பதிலால் சுவை கூடும் !
கவிதையும் கூட வாசகர்
மன ஓசையில் பிறந்துவரும்
கருத்தினால் !மேலும் சிறந்திடும்!

சரியா !தவறா !எது உன் கருத்து
தயக்கமின்றி தெரிவித்தால்
என் பிழை திருத்தப்படும்!
மேலும் உயரம் செல்ல ஊக்கம் கிடைக்கும்
நல் ஆக்கம் பிறக்கும் !

எழுதியவர் : kanagarathinam (16-Feb-14, 11:44 pm)
பார்வை : 68

மேலே