இது எப்படி இருக்கு
ஒரு கணவனும் மனிவியும் துணிக் கடையின் லிஃப்டில் மாடிக்குச் சென்றார்கள். ஒரு அழகிய பெண்னும் லிஃப்டில் வந்தாள். கணவன் அழகிய பெண்ணை ஒட்டியவாறு நிற்க, திடீரென அழகி அவனை அறைந்தாள். கணவன் அதிர்ச்சியடைந்து ஏன் இப்ப அறைஞ்ச? என்று கேட்க, எதுக்கு என் இடுப்பைக் கிள்ளினாய் என்று கேட்டாள்.
கணவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. மனைவிக்கு முன் இப்படி நடந்து விட்டதே என்ற அவமானம். அதோட பயங்கரக் குழப்பம் வேறே. லிஃப்ட் நின்னு எல்லோரும் வெளியேற மனைவி கிசு கிசுத்தாள். "அதையே யோசிச்சிட்டு இருக்காதீங்க. உங்க ஜொள்ளைப் பார்த்து எரிச்சல்ல நான் தான் அவளைக் கிள்ளினேன்:.