1 ரூ
நேற்று மாலை குரோம்பேட்டையிலிருந்து தாம்பரம் வரும் பேருந்தில் டிக்கெட்டிற்காக 10 ரூ கொடுத்தேன். கண்டக்டர் 1 ரூ கொடுங்கள் 5 ரூ தருகிறேன் என்றார். என்னிடம் 1 ரூ இல்லாததால் 2 ரூ கொடுத்து 6 ரூ கொடுங்கள் என்றேன். அவர் என்னிடம் 5 ரூ மட்டும் கொடுத்து, இறங்குமுன் 1 ரூ தருகிறேன் என்றார். அவர் கூறியபடி தாம்பரம் வந்ததும் 1 ரூ. கேட்டேன். அதற்கு அவர் என்னிடம் “1 ரூ கூட கரெக்டாகக் கொடுக்கவேண்டுமா? என்னிடம் இருந்தால் தரமாட்டேனா? அவ்வளவு கரெக்டாகக் கேட்கிறீர்களே?” என்றார். நான் அவரிடம் சண்டையிடாமல் பொறுமையாக, “அந்த 1 ரூ இருந்தால் பிச்சைகாரருக்குக் கொடுப்பேன். தினமும் 1 ரூ பிச்சை போடுவது என் வழக்கம். பரவாயில்லை, அது இன்று உங்களிடம்தான் இருக்கட்டுமே” என்றேன். அடுத்த சில நொடிகளில் கண்டக்டர் என் கையில் 1 ரூ கொடுத்தார் அசடு வழியும் முகத்துடன்.